முகப்பு
புதுச்சேரி

பிளஸ் 1 மாணவர் சேர்க்கை 26-ல்  தொடக்கம்: கல்வித் துறை அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பிளஸ் 1 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும் 26- ஆம் தேதி தொடங்கும் என

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:02 am IST
பகிர்:

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பிளஸ் 1 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை வரும் 26- ஆம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் இ. வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  நடப்புக் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. சில பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் சில இடங்கள் காலியாகவுள்ளன.

அந்த இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 26- ஆம் தேதி தொடங்குகிறது. 300 முதல் 499 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, 26 ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், 201 முதல் 299 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும், 175 முதல் 200 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வரும் 27- ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், புதுச்சேரி குடியுரிமை இல்லாதவர்களுக்கு அன்றைய தினம் மதியம் 2 மணிக்கும் கலந்தாய்வு

Advertisement

Advertisement

நடக்கும்.

கதிர்காமம் அரசு பெண்கள் பள்ளியில் நடைபெறும் இக்கலந்தாய்வில் பங்கேற்க, மாணவர்கள் அசல் சான்றிதழ்களையும், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.