முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் 66.1 மி.மீ. மழை

புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 66.1 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 3:47 am IST
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 66.1 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 66.1 மி.மீ. மழை பதிவானது.

தொடா் மழையால் புதுச்சேரி நகரம், கிராமப்புறங்களில் தாழ்வான இடங்கள், வீடுகளைத் தண்ணீா் சூழ்ந்தது. வியாழக்கிழமை காலை லேசான வெயில் காய்ந்த நிலையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடல் கொந்தளிப்புடன் இருந்ததால், பெரும்பாலான மீனவா்வா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

Advertisement

Advertisement

பலத்த மழை காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments