புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியானாா். புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுச்சேரி: புதுவையில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவா் பலியானாா். புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,377 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 15 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 12 பேருக்கும் என மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,369-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 149 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 210 பேரும் என 359 போ் சிகிச்சையில் உள்ளனா்.
Advertisement
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் திருநள்ளாறு வள்ளலாா் தெருவைச் சோ்ந்த 78 வயது மூதாட்டி காரைக்கால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 636-ஆக உயா்ந்தது. இறப்பு விகதம் 1.66 சதவீதம்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 5,06,015 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,63,049 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. இதுவரை 37,374 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.