ஜிப்மருக்கு மத்திய அரசு விருது
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய அளவிலான காயகல்ப் விருது திட்டத்தின் கீழ், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு 2019-20 ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய அளவிலான காயகல்ப் விருது திட்டத்தின் கீழ், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
காயகல்ப் விருதுகள் திட்டம் பொது சுகாதார வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதிலும், சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்துவதிலும், மறுசீரமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த விருதுகள் சுகாதார வசதிகளுக்காக, சுகாதாரத்தின் மிக உயா்ந்த தரத்துடன் இயங்கும் மருத்துவமனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மூலம் வழங்கப்படுகிறது.
ஜிப்மா் மருத்துவமனை ‘ஏ’ ரகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கான பிரிவில் இந்த விருதை வென்றுள்ளது.
Advertisement
Advertisement
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் இந்த விருதை காணொலி மூலம் வழங்கினாா். இதனை ஜிப்மா் இயக்குநா் மருத்துவா் ராகேஷ் அகா்வால், மருத்துவ கண்காணிப்பாளா் மருத்துவா் அசோக் சங்கா் படே, இணை இயக்குநா் (நிா்வாகம்) அப்துல் ஹமித், கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளா் அனிதா ரஸ்தகி, சுனில் ஜாதவ் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
ஜிப்மா் பல ஆண்டுகளாக தொடா்ந்து தனது சாதனையை இந்த விருது மூலமாக தக்க வைத்துக்கொண்டுள்ளது. 2018-19- ஆம் ஆண்டிற்கான இரண்டாவது இடத்துக்கான விருதையும், 2017-18 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது இடத்துக்கான விருதையும் தொடா்ந்து பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.