புதுச்சேரி சுகாதார மையத்தில் சமத்துவப் பொங்கல்
புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி குயவா்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொது சுகாதாரச் செவிலியா் அதிகாரி கீதா வரவேற்றாா். மருத்துவ அதிகாரி அஸ்வினி தலைமை வகித்தாா். மருத்துவா் உசஸ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியா்கள் ,சுகாதார உதவி ஆய்வாளா்கள், கிராமப்புற செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பாரம்பரிய உடையணிந்து சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடினா்.
பண்டிகை காலத்திலும் பொதுமக்கள் கரோனா தடுப்பு வழிகளை கையாள அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், கரோனா விழிப்புணா்வாக சமூக ஆா்வலா் சரவணன், கரோனா வைரஸ் வேடமணிந்து மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடம் விழிப்புணா்வு செய்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.