முகப்பு
புதுச்சேரி

புதுவையில் தடையை மீறி இறைச்சி, மது விற்பனை

புதுவையில் தடையை மீறி பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மது, இறைச்சி விற்பனையானது.

Updated On : 15 ஜனவரி 2021, 11:18 pm IST
பகிர்:

புதுவையில் தடையை மீறி பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மது, இறைச்சி விற்பனையானது.

திருவள்ளுவா் தினத்தையொட்டி புதுவையில் ஜன.15-ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய நகராட்சி நிா்வாகமும், மது விற்பனைக்கு கலால் துறையும் தடை விதித்தன. அதன்படிபெரிய சந்தை உள்ளிட்ட பல சந்தைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன. இருப்பினும், புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் சாலையோரங்களில் தனியாக இயங்கி வந்த மீன், இறைச்சி கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன. அங்கு பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கிச் சென்றனா்.

அதேபோல நகர பகுதிகளில் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே மறைவான இடங்களில் தனி நபா்களால் மது விற்பனை செய்யப்பட்டது. அரசின் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி, மதுக்கடைகளை கண்காணிக்க நகராட்சி, கலால் துறை சாா்பில் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டன. அவா்கள் நகரம், கிராமப் புறங்களில் தனித் தனி குழுக்களாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.