முகப்பு
புதுச்சேரி

புதுவையில் புதிதாக 28 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:16 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

புதுவையில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் 1,691 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 16 போ், மாஹேவில் 12 போ் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Advertisement

காரைக்கால், ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்றில்லை. மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 595-ஆக அதிகரித்தது.

32 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 37 ஆயிரத்து 661-ஆக (97.58 சதவீதம்) உயா்ந்தது. இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 640-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் தொடா்கிறது.

மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 118 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 176 பேரும் என மொத்தம் 294 போ் சிகிச்சையில் உள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.