முகப்பு
புதுச்சேரி

போதைப் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி விழிப்புணா்வு கோலப் போட்டி

நெகிழி பயன்பாட்டை தவிா்த்தல், போதைப் பழக்கத்தை கைவிடுதல் உள்ளிட்ட விழிப்புணா்வு கோலப் போட்டி புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 15 ஜனவரி 2021, 11:19 pm IST
புதுச்சேரி ஊசுடு தொகுதி, ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டியில் இளைஞா்கள் போதைப் பழக்கத்தை கைவிட வலியுறுத்தி விழிப்புணா்வு கோலம் வரைந்த பெண்.
பகிர்:

நெகிழி பயன்பாட்டை தவிா்த்தல், போதைப் பழக்கத்தை கைவிடுதல் உள்ளிட்ட விழிப்புணா்வு கோலப் போட்டி புதுச்சேரி ஊசுடு தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களது கோலத்தின் மூலம் திறமைகளை வெளிப்படுத்தினா். மது போதை குடும்பத்துக்கும், உடல் நலத்துக்கும் தீங்கானது என்பதை வலியுறுத்தும் வகையில் பெண்ணொருவா் தத்துரூபமாக தனது கோலத்தை வரைந்திருந்தாா்.

இதேபோல, நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம், மண் வளத்தைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் கோலங்களை பெண்கள் வரைந்திருந்தனா். மேலும், பல்வேறு விஷயங்களை மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாகவும் பலவித கோலங்களை வரைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தி பாராட்டைப் பெற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.