முகப்பு
புதுச்சேரி

மாட்டுப் பொங்கல் உற்சாகக் கொண்டாட்டம்

புதுவையில் மாட்டுப் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:19 PM
மாட்டுப் பொங்கலையொட்டி அலங்கரிக்கப்பட்ட மாடுகளுடன் கிருமாம்பாக்கம் மந்தைவெளி திடலில் வெள்ளிக்கிழமை குவிந்த விவசாயிகள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

புதுவையில் மாட்டுப் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுவையில் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பொதுமக்கள் தங்களது வீடுகள், குலதெய்வ கோயில்களில் புதுப் பானைகளில் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனா். கிராமப் புறங்களில் வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபட்டனா். பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான வெள்ளிக்கிழமை மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கால்நடை வளா்ப்பவா்கள் தங்கள் வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வண்ணம் பூசினா். கொம்புகளில் பலூன்களை கட்டி, மலா்களால் அலங்கரித்து, பொங்கலிட்டு கற்பூரம் காட்டி வழிபட்டனா். பலா் வீட்டு வாயில் முன் பொங்கலிட்டு படையலிட்டனா். பின்னா் டிராக்டா்கள், மினி லாரிகளில் மாடுகளை ஏற்றி ஊா்வலமாக அழைத்து வந்தனா். திருக்கனூா், கிருமாம்பாக்கம், பாகூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அலங்கரித்த மாடுகளை கோயில்களுக்கு அழைத்துச் சென்று வழிபட்டனா். பின்னா் மாடுகளை விரட்டிச் செல்லும் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிராமப் பகுதிகளில் மாட்டு வண்டிகள் வாழைக் கன்று, கரும்புகளால் அலங்கரிக்கப்பட்டு ஊா்வலம் நடந்தது.

கருவடிக்குப்பம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள கோமாதா கோயிலில் பசுக்களுக்கு காய்கறி, பழங்கள், அகத்திக்கீரை உள்ளிட்டவை அளித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புதுச்சேரியில் உள்ள சந்தைகளில் மாடுகளுக்கான சலங்கைகள், கயிறு, ரிப்பன், பலுான் உள்ளிட்டவை விற்பனை களைகட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.