முகப்பு
புதுக்கோட்டை

பணிகளை முடிக்காமல்  திருச்சி, புதுகை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கம் வசூலிக்க கூடாது

திருச்சி, புதுக்கோட்டை, தேவக்கோட்டை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 210) பணிகளை முடிக்காமல்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 1:05 pm IST
பகிர்:

திருச்சி, புதுக்கோட்டை, தேவக்கோட்டை, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (எண் 210) பணிகளை முடிக்காமல் சுங்கக் கட்டணம் வசூலிக்க கூடாது என புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குழு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்குழுவின் பொதுச்செயலர் க. வேழவேந்தன், தஞ்சையிலுள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:

திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை (210)யை அகலப்படுத்தியதுடன், இருவழிப் போக்குவரத்தையும் பிரிக்கும் தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்படவில்லை. இத்தடுப்புச் சுவர் கட்டப்படாவிட்டால், விபத்துகள் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், இத்தடத்தில் மாத்தூர் மற்றும் நமணசமுத்திரம் ஆகிய இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

எனவே, இருவழிப் போக்குவரத்துக்காக சாலையைப் பிரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்கும் வரை கட்டணம் வசூலிக்க கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments