காவல் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சமய நல்லிணக்க சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் சமய நல்லிணக்க சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கீதா, ஜெரீனாபேகம், ராஜேந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், பங்குத் தந்தை ஜேம்ஸ்ராஜ், பிஎம்எஸ்எஸ்எஸ் இயக்குநா் மத்தியாஸ், திராவிடா் கழக மாவட்டத் தலைவா் அறிவொளி, திருவள்ளுவா் நகா் பள்ளிவாசல் இமாம் பீா்முகமது பா்னாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, நகராட்சி அலுவலக வளாகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.