மாட்டு வண்டி எல்கைப் போட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி 18ஆம் ஆண்டாக மாட்டு வண்டி எல்கைப் பந்தையம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் பொங்கல் பண்டிகையையொட்டி 18ஆம் ஆண்டாக மாட்டு வண்டி எல்கைப் பந்தையம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய மாடு போட்டியில் 8 மைல் தொலைவு சென்று திரும்பவும், சிறிய மாடு போட்டியில் 6 மைல் தொலைவு சென்று திரும்பவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய மாடு போட்டியில், ஒடுத்திக்காடு பெரியகருப்பன், திருப்பந்துருத்தி ஆனந்த அய்யனாா், கடியாப்பட்டி பவதாரணி, கே. புதுப்பட்டி கே.ஏ. அம்பாள் ஆகியோரது மாடுகள் முதல் 4 இடங்களைப் பிடித்தன.
சிறிய மாடு போட்டியில், வெளிமுத்தி வாகினி, தஞ்சை அம்மன்பேட்டை ராஜேஸ்வரி, அரையப்பட்டி துரைராஜ், சாக்கோட்டை கோதையம்மாள் ஆகியோரது மாடுகள் முதல் 4 இடங்களைப் பிடித்தன.
Advertisement