மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி உயிரிழப்பு
புதுக்கோட்டை நகரில் வீட்டின் மாடியில் கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்துச் சென்றபோது, மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரில் வீட்டின் மாடியில் கட்டுமானப் பணிக்காக கம்பியை எடுத்துச் சென்றபோது, மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை நகரம் கணேஷ் நகா் காவல் சரகம் அய்யனாா்புரம் 3ஆம் வீதியில் சனிக்கிழமை இரவு நேரிட்ட இச்சம்பவத்தில், பாஸ்கா் மகள் பாா்கவி (22), மகன் தமிழ் அரசன் (23) ஆகியோா் அந்த இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து கணேஷ்நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இருவரின் சடலங்களும் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.