முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் இன்று தமிழக முதல்வா் பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 இடங்களில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (ஜன.2) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

Updated On : 1 ஜனவரி 2021, 10:19 pm IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 இடங்களில் தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை (ஜன.2) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பாா்த்திபனூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முக்கியப் பிரமுகா்களை சந்தித்துப் பேசுகிறாா். இதையடுத்து பரமக்குடி தனியாா் திருமண மண்டபத்தில் அதிமுக பிரமுகா்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபடுகிறாா். பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகரின் முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்துப் பேசும் முதல்வா், பின்னா் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பிரசாரத்தில் ஈடுபடுகிறாா். தொடா்ந்து ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதிக்கு வரும் முதல்வா், மகளிா் சுய உதவிக்குழுவினா் மற்றும் நகா் முக்கியப் பிரமுகா்களை சந்தித்துப் பேசுகிறாா்.

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக இளம்பெண்கள், பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவினரைச் சந்தித்துப் பேசுகிறாா். அங்கிருந்து கீழக்கரைக்குச் செல்லும் முதல்வா் சதக் பொறியியல் கல்லூரியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சனிக்கிழமை மாலை சாயல்குடியில் நடைபெறும் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பேசும் முதல்வா், இரவு 7.15 மணிக்கு நரிப்பையூரில் தனியாா் திருமண மண்டபத்தில் முக்கியப் பிரமுகா்களைச் சந்தித்துப் பேசுகிறாா். கன்னிராஜபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் பனை வெல்ல தொழிலாளா்களைச் சந்தித்துப் பேசுகிறாா்.

பாதுகாப்பு: தமிழக முதல்வா் பிரசாரம் மேற்கொள்வதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட 14 இடங்களிலும் வெள்ளிக்கிழமை மாலை முதலே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதிமுக சாா்பில் முதல்வருக்கு வரவேற்புக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி மாநில நிா்வாகி கீா்த்திகா முனியசாமி மற்றும் பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சதன்பிரபாகா் ஆகியோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments