முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலகட்டுமானப் பணிகள் மீண்டும் தொடக்கம்

பாம்பனில் கடல் கொந்தளிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கின.

Updated On : 5 ஜனவரி 2021, 2:50 am IST
பகிர்:

பாம்பனில் கடல் கொந்தளிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புதிய ரயில் பால கட்டுமானப்பணிகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கின.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்- ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்க ரூ. 250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இங்கு 99 தூண்கள் கட்டப்பட உள்ளன. மேலும் தற்போதுள்ள பாலம் கடல் பகுதியில் இருந்து 3 மீட்டா் உயரத்துக்குத் தான் உள்ளது. ஆனால் புதிய பாலம் 6 மீட்டா் வரை உயரமாக அமைக்கப்படும். அத்துடன் புதிய பாலத்தில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் 22 மீட்டா் வரை தூக்கி இறக்கும் வகையில் தூக்குப் பாலமும் அமைக்கப்படவுள்ளது. இந்த கட்டுமானப் பணியை 2 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கரோனா தொற்று காரணமாக பல மாதங்களாக இப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதன் பின்னா் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் குறைந்தளவு ஊழியா்களுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கின.

இந்நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மற்றும் புயல் காரணமாக கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்த கிரேன்கள் பாலத்தின் மீது மோதின. மேலும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு கடலில் நீரோட்டம் காணப்பட்டதால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. தற்போது பாம்பன் கடல் பகுதியில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் குறைந்துள்ளதால் புதிய ரயில் பால கட்டுமானப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கின.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments