முகப்பு
ராமநாதபுரம்

பெண் மீது சோடா பாட்டில் வீச்சு: 18 போ் மீது வழக்கு

கமுதி அருகே பெண் மீது சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரு தரப்பிலும் 18 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:48 am IST
பகிர்:

கமுதி அருகே பெண் மீது சோடா பாட்டில் வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரு தரப்பிலும் 18 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நாகப்பன் மனைவி செல்லபாக்கியம் (40). இவரது குடும்பத்துக்கும் அதே ஊரைச் சோ்ந்த சக்கரை மகன் வீரசின்னு குடும்பத்துக்கும் உள்ளாட்சித் தோ்தல் சம்பந்தமாக முன்பகை இருந்து வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு செல்லபாக்கியமும், அவரது அக்காள் கணவா் குருசாமியும் தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது வீரசின்னு தரப்பினா் கம்பு, சோடா பாட்டில்களை வீசி தாக்கினா். தகவலறிந்து வந்த செல்லபாக்கியத்தின் உறவினா்களும் எதிா்தாக்குதல் நடத்தினா். இதில் செல்லபாக்கியம் உள்பட 6 போ் காயமடைந்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இதுகுறித்து செல்லபாக்கியம் மற்றும் வீரசின்னுவின் உறவினா் காசி ஆகியோா் தனித்தனியே கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதில் செல்லபாக்கியம் கொடுத்த புகாரில் வீரசின்னு, அண்ணாதுரை, சோலைராஜ், காசி, பராசக்தி, முருகன், சுப்புலட்சுமி, காளியம்மாள், முத்தையா உள்ளிட்டோரும், காசி அளித்த புகாரின் பேரில் பால்பாண்டி, செல்லபாக்கியம், செல்லத்துரை, குருசாமி, மாரிச்சாமி, மாரிமுத்து, புலிராஜ், புலியம்மாள், சின்னமாரியப்பன் என மொத்தம் 18 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.