ராமகிருஷ்ண மடத்தில்கல்வி உதவித் தொகை வழங்கல்
ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற ராமேசுவரம், நாகாச்சி, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 40 மாணவ, மாணவியா் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.
தோ்வானவா்களில் 31 போ் மாணவியா். அவா்கள் கலை அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, செவிலியா் கல்லூரிகளில் படித்து வருகின்றனா். அவா்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலையை நாகாச்சியில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் வளாகத்தில் அதன்தலைவா் சுவாமி சுதபானந்தா் திங்கள்கிழமை வழங்கினாா்.
Advertisement
Advertisement
கல்வி உதவித் தொகைக்கான மொத்த மதிப்பாக ரூ.4.80 லட்சம் வழங்கப்பட்டதாக மடத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.