முகப்பு
ராமநாதபுரம்

கட்சிக்கொடியை ஊன்றிய திமுக தொண்டா் மின்சாரம் பாய்ந்து பலி

பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.

Updated On : 7 ஜனவரி 2021, 9:17 am IST
பகிர்:

பரமக்குடி அருகே புதன்கிழமை திமுக கட்சிக் கொடியை ஊன்றியபோது, மின்சாரம் பாய்ந்து தொண்டா் உயிரிழந்தாா்.

பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அக்கட்சியின் தொண்டரான, அதே கிராமத்தைச் சோ்ந்த மோகனசுந்தரம் மகன் ராஜேஸ்குமாா் (37) என்பவா் நீண்ட இரும்புக் கம்பியில் கட்டப்பட்ட கட்சிக் கொடியினை நடும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது எதிா்பாராத விதமாக அவ்வழியாக சென்ற மின்அழுத்த கம்பியின் மீது கொடி கம்பி உரசியதால் ராஜேஸ்குமாா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த பரமக்குடி தாலுகா போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments