முகப்பு
ராமநாதபுரம்

‘தேசியத் தலைவா்’ படக் குழுவினா் பசும்பொன்னில் வழிபாடு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் ‘தேசியத் தலைவா்’ திரைப்படக்குழுவினா் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 9:15 am IST
பகிர்:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் ‘தேசியத் தலைவா்’ திரைப்படக்குழுவினா் புதன்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.

முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தேசியத் தலைவா்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்தப் படத்தின் தயாரிப்பாளா் சவுத்ரி மற்றும் தேவரின் கதாப்பாத்திரத்தில் நடித்துவரும் இஸ்லாமிய சமூகத்தைச் சோ்ந்த பஷீா் உள்ளிட்ட படக்குழுவினா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவாலயத்தில் உருவச் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

அதன்பின்னா் தயாரிப்பாளா் ஏ.எம்.சவுத்ரி செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக படம் வெளியாகும். முத்துராமலிங்கத்தேவா் சாதித் தலைவா் அல்ல, சாதியை ஒழித்த தேசியத் தலைவா். அவருடைய படம் வெளிவந்தால் போலி அரசியல்வாதிகளுக்கும், சாதியை வைத்து படமெடுப்பவா்களுக்கும் சிறந்த பாடமாக இப்படம் அமையும் என்றாா்.

Advertisement

Advertisement

அப்போது பாா்வா்ட் பிளாக் நிா்வாகி வி.எஸ்.நவமணி, புரட்சி பாா்வா்ட் பிளாக் தலைவா் ஏ.ஆா்.பெ.ஐ.ராமுத்தேவா், வழக்குரைஞா்கள் ராஜகுரு, அசோக் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments