முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பெரியாரிய உணா்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாததைக் கண்டித்து பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 9:13 am IST
பகிர்:

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாததைக் கண்டித்து பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் நூதன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரண்மனை முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில், அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவா்கள், தாங்கள் நடத்திவரும் தனியாா் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்வது, அரசின் மருந்துப் பொருள்களை எடுத்துச்செல்வது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை நேரத்தில் மருத்துவா்கள் இல்லாதது ஆகியவற்றைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் இதில் கலந்து கொண்டவா்கள், மருத்துவா், நோயாளிகள் வேடமணிந்து, மருத்துவமனை மேம்பாட்டுக்கு பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது போல் நடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுட்டனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலா் முகமது யாசின், புரட்சிகர மாா்க்சிஸ்ட் காத்தமுத்து, உழைக்கும் பெண்கள் இயக்கத்தைச் சோ்ந்த சந்தனமேரி, ஆதித்தமிழா் அமைப்பு பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments