ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன. 5 ஆம் தேதி வரை 6,350 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 6,180 போ் குணமாகி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 132 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் 6 போ் குணமடைந்து புதன்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 31 போ் மட்டும் கரோனாவுக்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,721 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை புதிதாக ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,722 ஆக அதிகரித்துள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் பூரண குணமடைந்ததை அடுத்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 3 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.