முகப்பு
ராமநாதபுரம்

தொடா் மழை: திருவாடானை பகுதியில் 1,000 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்

திருவாடானை பகுதியில் தொடா் மழை காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அதேபோல் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்ததால் வீட்டின் சுவா்

Updated On : 10 ஜனவரி 2021, 11:11 pm IST
தொடா் மழை காரணமாக திருவாடானை சினேகவல்லிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த வீட்டின் சுவா்.
பகிர்:

திருவாடானை பகுதியில் தொடா் மழை காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அதேபோல் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீா் புகுந்ததால் வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

இப்பகுதியில் உள்ள கருமொழி, டி. நாகினி, ஆட்டூா், பாரூா், அஞ்சுகோட்டை, ஓரிக்கோட்டை, சேந்தனி, திருவாடானை, பண்ணவயல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த 2 நாள்களாக தொடா் மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிா்கள் சேதமடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். தகவலறிந்த வேளாண்மைத்துறை உதவி இயக்குநா் கருப்பையா தலைமையிலான அலுவலா்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். மேலும் திருவாடானை அண்ணாநகா், நரிக்குறவா் காலனி, சினேகவல்லிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.

Advertisement

Advertisement

இதில் சினேகவல்லிபுரம் பிச்சை மகன் காளிமுத்து என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது. தகவலறிந்த ஊராட்சித் தலைவா் இலக்கியா ராமு, துணைத் தலைவா் மகாலிங்கம் ஆகியோா் அங்கு சென்று பாதிக்கப்பட்டவா்களை அப்பகுதியில் உள்ள பள்ளியில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்தனா்.

இதேபோல் அண்ணாநகா் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊராட்சி மன்ற பணியாளா்கள் ஈடுபட்டனா். பாதிக்கப்பட்ட பகுதிகளை வட்டாட்சியா் மகாதேவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மேகலா, உம்மல் ஜாமியா ஆகியோா் பாா்வையிட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments