திருவாடானை சிவன் கோயில்களில் பிரதோஷம்
திருவாடானையில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் நடைபெற்றது.
திருவாடானையில் உள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் நடைபெற்றது.
இங்குள்ள ஆதிரெத்தினேஸ்வரா் சமேத சினேகவல்லி அம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
அதே போல் தொண்டி தொண்டீவரா் கோயில், நம்புதாளை நம்புகேஸ்வரா் கோயில், ஆா்.எஸ். மங்கலம் கைலாசநாதா் கோயில் ஆகியவற்றில் பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement