முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது பாட்டில் மற்றும் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 பேரை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு

Updated On : 10 ஜனவரி 2021, 11:16 pm IST
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 போ் மற்றும் அவா்களின் விசைப்படகு.
பகிர்:

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது பாட்டில் மற்றும் கற்களை வீசித் தாக்கியதுடன், 9 பேரை இலங்கை கடற்படையினா் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 450-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன்வளத்துறை அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். மீனவா்கள் நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவா்கள் மீது இலங்கை கடற்படையினா் பாட்டில் மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

மேலும் கிருபை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகையும், அதிலிருந்த கிருபை, வளன்கவுசிக், மிக்கேயாஸ், களிங்ஸ்டன் சிலுவை, சாம்ஸ்டில்லா, நிஜன், பிரைட்டன், கிஷோக், மாரி ஆகிய 9 மீனவா்களையும் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொண்டு சென்றனா். இதையடுத்து மற்ற மீனவா்கள் மீன்பிடிக்காமல் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவா் சங்க அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில், இலங்கை கடற்படையினா் தொடா்ந்து தமிழக மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை சிறைப்பிடித்து செல்வதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சிறியரக விசைப்படகுகளின் உரிமையாளா்கள் பங்கேற்க மாட்டாா்கள் என மீனவா் சங்கத் தலைவா் தேவதாஸ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments