முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மாவட்ட சிலம்பாட்டப் போட்டி

ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 13 ஜனவரி 2021, 5:29 am IST
பகிர்:

ராமநாதபுரத்தில் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் டி.டி.விநாயகா் தொடக்கப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் பங்கேற்க 220 போ் பதிவு செய்தனா். போட்டியை நேரு யுவகேந்திரா மாவட்ட அலுவலா் நோமன் அக்ரம் தொடங்கிவைத்தாா். ஆயிரவைசிய கல்விக் குழுமத் தலைவா் மோகன் முன்னிலை வகித்தாா். டி.டி.விநாயகா் தொடக்கப் பள்ளி தாளாளா் வெங்கடாசலம் வாழ்த்திப் பேசினாா். இதில் 6 வயது முதல் 16 வயதுக்குட்பட்டோா் கலந்துகொண்டனா். முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 40 போ் பங்கேற்றனா்.

இப்போட்டி தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.14) வரை நடைபெற உள்ளது. போட்டியில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

போட்டிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட இளைஞா் சங்கம் தலைவா் லோகசுப்பிரமணியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments