முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு குறித்து...
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு திங்கள்கிழமை(ஜூன் 29) தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, நிா்வாகம், நலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஈா்ப்பு, தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் முதல்வா் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான மாநாடு நடைபெறுவது வழக்கம்.
தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறையாக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள்(ஜூன் 29, 30) மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த மாநாட்டில், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட வன அலுவலா்கள் பங்கேற்றுள்ளனா்.
மாநாட்டில் சட்டம்-ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு, அரசுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
A two-day conference of IAS and IPS officers, led by Chief Minister Vijay....
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.