சட்ட விரோதமாக மது விற்ற 88 போ் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ாக 88 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்ாக 88 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா்.
திருவள்ளுவா் தினமான வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில், காவல்துறையினா் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலா்கள் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 88 பேரைக் கைது செய்தனா். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 46 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.