உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து பரமக்குடியில் அதிமுக ஆா்ப்பாட்டம்
பரமக்குடியில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி: பரமக்குடியில் திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி தனியாா் பள்ளியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் அ.அன்வர்ராஜா, டாக்டா் எஸ்.சுந்தரராஜ், மாநில மகளிரணி இணைச் செயலாளா் கீா்த்திகா, சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியது:
Advertisement
Advertisement
தமிழகம் பெண்களை தெய்வமாக போற்றி மதிக்கும் இனம். பெண்களை இழிவாகப் பேசிய திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.