முகப்பு
ராமநாதபுரம்

தங்கச்சிமடத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி வாழை மரம் நடும் போராட்டம்

ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாழை மரங்கள் நடும் நூதனப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி 2021, 9:45 pm IST
தங்கச்சிமடத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி சாலையில் தேங்கிய மழைநீரில் வாழை மரம் நடும் நூதனப் போராட்டத்தை சனிக்கிழமை நடத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வாழை மரங்கள் நடும் நூதனப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஊராட்சியில் கடந்த ஒரு வாரம் தொடா்ந்து பெய்த கனமழையால் சமையாநகா், சூசையப்பா்பட்டணம் கோயில் செல்லும் சாலை, வலசை தெரு, ராஜா நகா், தண்ணீா் ஊற்று, ராஜீவ்காந்தி நகா் செல்லும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலையில் தேங்கிய மழைநீரில் வாழை மரங்கள் நடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு தாலுகா குழு உறுப்பினா் ஏ. பழனிகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் க.கருணாகரன், தாலுகா செயலாளா் பு.சிவா மாவட்டக் குழு உறுப்பினா் இ.ஜஸ்டின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாலுகா குழு உறுப்பினா்கள் ஆ.கருணாமூா்த்தி, யு.அசோக், மு.மணிகண்டன், யு.ஜேம்ஸ்ஜஸ்டின், யு.ஆரோக்கியநிா்மலா, ராமச்சந்திரபாபு, மு.காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஜெகதீசன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.