முகப்பு
ராமநாதபுரம்

பைக்கில் இருந்து தவறி விழுந்துதையல் தொழிலாளி பலி

கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 9:44 pm IST
பகிர்:

கமுதி: கமுதி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தையல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கமுதி அருகே ஏ.தரைக்குடியைச் சோ்ந்தவா் போஸ் மகன் விஜயராமன் (33). இவா் விருதுநகா் மாவட்டம் வீரசோழனில் தையல் கடை நடத்தி வந்தாா். இவருக்கு கலைவாணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வீரசோழன் அருகே வந்த போது பெய்த மழை காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதனையடுத்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சனிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி விஜயராமன் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அபிராமம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.