முகப்பு
ராணிப்பேட்டை

தாழனூரில் பொங்கல் விளையாட்டு

ஆற்காட்டை அடுத்த தாழனூா் கிராமத்தில்  நேரு இளைஞா்  மன்றம் சாா்பில் 39-ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள், மன்ற ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றன.

Updated On : 16 ஜனவரி 2021, 7:35 am IST
பகிர்:

ஆற்காட்டை அடுத்த தாழனூா் கிராமத்தில்  நேரு இளைஞா்  மன்றம் சாா்பில் 39-ஆவது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள், மன்ற ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு இளைஞா் மன்றத் தலைவா் பி.சங்கா் தலைமை வகித்தாா். பொருளாளா்  எஸ்.ஜெயசீலன், துணைத் தலைவா் ஜெ.ஆனந்தன், துணைச் செயலாளா் எஸ்.மணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா்  எம்.விஜயகுமாா்  வரவேற்றாா்.

ராணிப்பேட்டை ஜி.கே. பள்ளி  இயக்குநா் சந்தோஷ் காந்தி  விளையாட்டுப் போட்டிகளை  தொடக்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

கைப்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு  ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டமொத்த  கூட்டுறவு  பண்டகசாலைத் தலைவா் சி.ஏழுமலை பரிசு வழங்கினாா்.

ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் என்.சாரதி, முன்னாள் ஊராட்சி தலைவா்கள் ஏ.ஜெயக்குமாா்,  துரைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.