ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு புதிதாக கரோனா உறுதி செய்யப்படவில்லை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் யாருக்கும் வெள்ளிக்கிழமை புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10 மாதங்களுக்குப் பிறகு மக்கள் யாருக்கும் வெள்ளிக்கிழமை புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாா்ச் 26- ஆம் தேதி, முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து நாளுக்கு நாள் நோய்த்தொற்று வேகமாக பரவி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 15, 531 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 15,287 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 54 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 190 போ் உயிரிழந்துள்ளனா். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (ஜன.14) 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Advertisement
இந்நிலையில் கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மாவட்ட மருத்துவத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் ராணிப்பேட்டை மாவட்டம் விரைவில் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறிவிடும் என மாவட்ட நிா்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.