திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா: சிவப்பு சாத்தி சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சுவாமி சிவப்பு சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 8-ஆம் திருவிழாவான திங்கள்கிழமை பச்சை சாத்தி வீதி உலா நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
7-ஆம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நடைபெற்றது. தொடர்ந்து ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மாலையில் சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Advertisement
8-ஆம் திருவிழாவான திங்கள்கிழமை (செப்டம்பர் 2) பகல் 12 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சேர்கிறார்.
ஒன்பதாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 4) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.