அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி, கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு அபிஷேக -ஆராதனைகள் நடைபெற்றன.
பன்னீர், மஞ்சள், பால், பழம், பூ உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர் கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம், தானிப்பாடி, வேட்டவலம், ஆவூர், தண்டராம்பட்டு, போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.