ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேடு: இளைஞர் கைது
ஹைதராபாதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாதில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆர்ஜித சேவா டிக்கெட் முறைகேட்டில் ஈடுபட்ட ராஜ்குமார் ரெட்டி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் எஸ்.ஆர்.நகர் அருகில் உள்ளது சிவபாக் காலனி. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலரிடம் ராஜ்குமார்(35) என்பவர் திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜித சேவைகளான மேல்சாட் வஸ்திரம், பூராபிஷேகம் உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்டுகளை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.20 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார்.
எனினும் அவர்களுக்கு உரிய டிக்கெட்டுகளை அளிக்காததால் அவர் மீது சந்தேகம் அடைந்த அவர்கள் எஸ்.ஆர்.நகர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ராஜ்குமார் ரெட்டியை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.