காஞ்சி மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவம் தொடக்கம்
காஞ்சி காமகோடி மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காஞ்சி காமகோடி மகாபெரியவரின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
காஞ்சி காமகோடி மகாபெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 126-ஆவது ஜயந்தி மகோற்சவம் தேனம்பாக்கம் மகாபெரியவர் தியான மண்டபத்தில் மே 5-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெறவுள்ளது.
தொடர்ந்து 15 நாள்களுக்கு நடைபெறும் இந்த உற்சவத்தில் ரிக் வேத சாகல சாகை, சம்ஹிதை பாராயணத்தை ரகுராம கனபாடிகள், சுக்ல யஜுர் வேத கன பாராயணத்தை குமரகுரு கனபாடிகள், யஜூர் வேத தைத்ரிய சாகை, சம்ஹிதை பாராயணத்தை ராமமூர்த்தி கனபாடிகள் மற்றும் சர்வேஸ்வர கனபாடிகள், சாம வேத கௌதும சாகை பாராயணத்தை சந்திர மௌலி ஸ்ரௌதிகள், வித்யார்த்திகள் ஆகியோர் உலக நன்மைக்காக பாராயணம் செய்யவுள்ளனர்.
விழாவில், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 வரை கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமங்கள் நடத்தப்படவுள்ளன. தொடர்ந்து, காலை, மதியம், மாலை வேளைகளில் வேதபாராயணங்கள் நடைபெறும். 19-ஆம் தேதி காலை 8 மணிக்கு ருத்ர ஏகாதசியும், மதியம் 12 மணிக்கு பூர்ணாஹுதியும், 1 மணிக்கு மகா பெரியவருக்கு மஹா அபிஷேகமும் நடைபெறும். இதைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மகா பெரியவரின் தங்க ரத ஊர்வலம் காஞ்சி சங்கர மடத்திலிருந்து புறப்பட்டு நான்கு ராஜவீதிகளில் திருவீதியுலா நடைபெறும்.
விழாவையொட்டி, காமாட்சியம்மன் சமேத பிரம்மபுரீஸ்வரருக்கு சம்வத்ஸராபிஷேகமும், மகாபெரியவருக்கு மஹா ருத்ர அபிஷேகமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஸ்ரீசங்கர பக்த ஜன சபை அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.