முகப்பு
செய்திகள்

வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி: பிளாஸ்டிக் பயன்படுத்தத் தடை!  

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

Updated On : 17 பிப்ரவரி 2023, 12:23 pm IST
பகிர்:

சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலை ஒட்டியுள்ள மலைத்தொடரில் ஏழாவது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான மூன்று மாதங்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்கள் மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் கொண்டு செல்வதைத் தடுக்க, வனப்பணியாளர்கள் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிகளை வனத்திற்குள் வீசுவதைத் தவிர்ப்பதற்காக வனத்துறை புதிய திட்டம் வகுத்துள்ளது. அதாவது கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, முன்பணமாக ரூ.20 பெறப்பட்டு, மலைக்கு சென்று திரும்பும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை கொடுத்துவிட்டு, அந்த பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments