அமைச்சர் சேகர்பாபு 
செய்திகள்

தைப்பூசம்! பழனி முருகன் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்: அமைச்சர் சேகர்பாபு

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக அமைச்சர் சேகர்பாபு தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பழனி முருகன் கோவிலில் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மருதமலை முருகன் கோயிலில் மின் தூக்கி வசதியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். மேலும், சுவாமி மலை கோவில் லிப்ட் வசதி பிப்ரவரி மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருநாளில் பக்தர்களுக்கு மின் தூக்கி (லிப்ட்) வசதியை பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது அவர் பேசுகையில், உலகெங்கிலும் இருக்கின்ற தமிழ் கடவுள் முருக பக்தர்களுக்கு தைப்பூசத் திருநாளில் முருகனை வழிபட்டு இறை அருள் வேண்டுவது, இன்றைக்கு வைக்கின்ற கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு, வருகின்ற முருக பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் பல திருக்கோயில் சிறப்பு கட்டணங்கள் ரத்து செய்யப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் இன்றைக்கு முருகப் பெருமானை தரிசித்து வருவதாக கூறினார்.

உதாரணத்திற்கு நேற்று ஒரு நாளில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் இறை தரிசனம் மேற்கொண்டு உள்ளனர். அதேபோல் திருச்செந்தூர், படை வீடுகளான திருத்தணி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சிறுவாபுரி, வடபழனி இது போன்ற திருக்கோவில்களிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முருகனை வந்து தரிசித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை மங்களகிரி வேலாயுத சாமி திருக்கோவிலூரில் புதிதாக 8 கிலோ 600 கிராம் கொண்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலே வடிவமைக்கப்பட்டு உள்ள முழுக்க உபயதாரர்களால் செய்யப்பட்ட தங்கத்தேர் விழா இன்று முருக பக்தர்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐந்து நிலை கொண்ட அந்த ராஜகோபுரத்தில் திருப்பணி, மந்திரகிரி வேலாயுத சாமி திருக்கோவிலில் சுமார் 1.85 லட்சம் செலவில் ராஜகோபுரம் கட்டுகின்ற கட்டுமான பணிகளும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ராஜகோபுரம் பொறுத்த வரை இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட்ட பிறகு 109 ராஜகோபுரங்கள் புதிதாக சுமார் ரூ.216.74 கோடி செலவில் அறிவிக்கப்பட்டதாகவும், அதில் 27 ராஜகோபுரங்கள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அதே போன்று ராஜகோபுரங்கள் மராமரத்து பணிகள் சுமார் 351 திருக்கோவில்களின் ராஜகோபுரங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 93.84 கோடி ரூபாய் அதற்கு ஒதுக்கீடு செய்து இதுவரை 182 திருக்கோவில்கள் மராமரத்து பணிகள் முடிவு அடைந்து உள்ளதாக கூறினார்.

"மருதமலைக்கு நீங்கள் வந்து பாருங்கள் தீராத நோய்கள் எல்லாம் தீர்ந்து விடும்" என்ற பாடல் வரிக்கு ஏற்ப பந்நெடுங் காலமாக திருக்கோவிலில் காண வேண்டும் என்று வயது முதிர்ந்த மூத்தோர், உடல் நலக் குறைவு உள்ளோர் இந்த கோவிலை காண முடியாமல் ஏங்கி இருந்ததாகவும், சுமார் 8 ஆண்டுகளாக தொடங்கப்பட்ட இந்தப் பணி தற்போது நிறைவுற்று மின் தூக்கி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அது இரண்டு தளங்களை கொண்டதாகவும் ஒரே முறையாக 40 பேர் பயணிக்கின்ற அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

மின் தூக்கி செல்வதற்கு கட்டணம் என்பது 30 ரூபாய் என்று நிர்ணயித்து உள்ளதாகவும், அது மாற்றுத் திறனாளிகளுக்கு முழுவதும் இலவசம் என்றும், நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சலுகைகள் என்று இன்றில் இருந்து என் அப்பன் முருகனை காண முடியாதவர்கள் எல்லாம் காணுகின்ற ஒரு நல்ல சூழ்நிலை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் குறப்பிட்டார்.

இதற்கு முன்னால் அய்யர் மலை ரோப் கார், அதேபோல் சோளிங்க மலையினுடைய ரோப் கார், இது இரண்டும் திராவிட மாடல் ஆட்சியில் தான் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்பதை தெரிவித்துக் கொண்டு இதே போல் சாமி மலைக்கு ஒரு தானியங்கி லிப்ட் என்பது அடுத்த பிப்ரவரி மாதம் இறுதிக்குள் அதுவும் பக்தர்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு உள்ளதாக கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

உதய்பூர் மாளிகையில் ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம்?

தோல்விப்படமான திரௌபதி - 2!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: மக்கள் விரோதமானது! - மமதா

எதிர்பார்ப்புகளை வீழ்த்தியிருக்கும் பட்ஜெட்: காங்கிரஸ் கருத்து

SCROLL FOR NEXT