காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா!
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா பற்றி..
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த மே மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி காலையிலும், மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தங்கக் கருட வாகன சேவை கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான மகா ரதம் எனும் தேரோட்டம் புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி பெருமாள் ராஜநடையுடன் கொண்டை முடிச்சு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். தேரில் சிறப்புத் தீபாரதனைகளும் நடைபெற்றன. தேர்த்திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே. தென்னரசு, தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் மற்றும் அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆனையர் குமரதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
கோயில் உதவி ஆணையர் ஆர். ராஜலட்சுமி காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் வினோத் வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் கதிரவன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் எஸ் பி தலைமையில் எஸ் பி எஸ் அரவிந்த் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேரோட்டத்தின் இரு புறத்திலும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து இழுத்தனர். தேர் செல்லும் வீதிகள் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் அன்னதானம் வழங்கினர். தேரோட்டம் ஏற்பாடுகளைக் கோயில் ஆர். ராஜலட்சுமி தாகூர் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.