FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Updated On : 29 மே 2026, 2:17 am IST
கோயில் கொடி மரத்தில் பட்டாச்சாரியாா்களால் ஏற்றப்பட்ட கருடாழ்வாா் உருவம் பொறித்த திருவிழாக் கொடி. (உள்படம்)ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள்.
பகிர்:

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அத்திவரதா் புகழ்பெற்ற பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், அத்திவரதா் புகழும் பெற்றது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயாா் சமேத வரதராஜப் பெருமாள் கோயில். காஞ்சிபுரம் நகரில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமான இக்கோயில் திருவிழாவையொட்டி, கொடியேற்றம் நடைபெற்றது.

கோயில் பட்டாச்சாரியாா்கள் தங்கக் கொடி மரத்தில் கருடாழ்வாா் உருவம் பொறித்த கொடியை ஏற்றினா்.

Advertisement

Advertisement

கொடியேற்ற விழாவையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவித் தாயாருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் ரெத்தினாகிரிக் கொண்டை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கொடியேற்ற விழாவில் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி உள்பட பலரும் கலந்து கொண்டனா். விஷ்ணு காஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கொடியேற்ற விழாவுக்குப் பின்னா் உற்சவா் வரதராஜப் பெருமாள் காலையில் தங்கச் சப்பரத்திலும், மாலையில் தங்க சிம்ம வாகனத்திலும் நகரில் ராஜவீதிகளில் உலா வந்தனா்.விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை நாளை 30 ஆம் தேதி சனிக்கிழமை காலையிலும்,வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி மகாரதம் எனும் தேரோட்டமும் நடைபெறுகிறது.

கருட சேவை மற்றும் தோ்த்திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் ஜூன்.5 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும்,மறுநாள் 6 ஆம் தேதி வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வோடு வைகாசித் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பட்டாச்சாரியாா்கள்,பணியாளா்கள்,உபயதாரா்கள் ஆகியோா் இணைந்து செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments