இராஜகோபால ஸ்வாமி கோயிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்!
அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோவிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு இராஜகோபால ஸ்வாமி திருக்கோவிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பழமையும் பெருமை வாய்ந்த அருள்மிகு அழகியமன்னாா் ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவராக வேத நாராயணர் மற்றும் மூல விமானத்தில் சுவாமி அழகிய மன்னாரும் அருள்பாலிக்கின்றனர். உற்சவா் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலா் என 3 நிலைகளில் பக்தா்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசியில் உலக நன்மைக்காகவும் பருவத்தே மழை பொழியவும் இயற்கை இடையூறுகள் இல்லாமல் இருக்க ஸ்ரீனிவாக கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண நிகழ்வு இன்று நடைபெற்றது. இதற்காக காலையில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீராஜகோபாலருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ இராஜகோபாலா் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி இருக்க 51 வகை சீா்வாிசைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு திருவீதி உலா நடைபெற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக கல்யாண மண்டபத்திற்கு தாயார்களான ஸ்ரீ ருக்மணி, ஸ்ரீ சத்யபாமா ஆகியோா் தோளுக்கிணியான் பல்லக்கில் எழுந்தருளினார்கள். மாப்பிள்ளை பெண்ணுக்குப் பாலால் கால் அலம்பும் நிகழ்ச்சி நடைபெற்று, ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பின்னா் மாப்பிள்ளை பெண்ணுக்கு காப்புக் கட்டும் வைபவம் நடைபெற்றது. இராஜகோபாலருக்கும் தாயாருக்கும் புது வஸ்திரம் சாற்றப்பட்டு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. கோத்திரம் மாற்றும் சம்பிரதாயம் முடிவடைந்து பெண்ணை தாரை வார்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
பக்தர்களின் கோபால கோவிந்தா கோஷங்களுடன் திருமாங்கல்யதாரண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அக்னி வலம் வருதல் பொாியிடுதல் அட்சதை ஈடுதல் என மங்கல நிகழ்ச்சிகள் நடைபெற்று வாணரமாயிரம் பாடி நலுங்கு நடைபெற்றது. நிறைவாக நட்சத்திர ஆரத்தி கும்ப ஆரத்தி மங்கல ஆரத்தி காண்பிக்கப்பட்டது. வந்திருந்த ஆயிரக்கணக்கான அனைத்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு, அட்சதை பிரசாதம் வழங்கப்பட்டது. ஸ்ரீமான் ஆயக்கடி குமாா் பாகவதாின் சிறப்புப் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் பெருமாள் தாயார் திருவீதி புறப்பாடு நடைபெற்றது.