குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா!
எர்த்தாங்கல் கெங்கையம்மன் சிரசு திருவிழா பற்றி..
எர்த்தாங்கல் கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிலையில், இன்று கெங்கை அம்மன் சிரசு காளியம்மன் கோயிலிருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற வழிநெடுகிலும் மலர்மாலை மற்றும் எலுமிச்சைப்பழம் மாலை ஆகியவற்றை சிரசு மீது வீசி வழி நெடுகிலும் பக்தர்கள் தரையில் படுத்தும், சூர தேங்காய்களை உடைத்தும், சிலம்பாட்டத்துடன் அம்மனை ஆலயம் கொண்டு வரப்பட்டு அம்மன் உடல் மீது சிரசு பொருத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், அலகுகுத்தி அந்தரத்தில் தொங்கியவாறு பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். கெங்கை அம்மன் சிரசு திருவிழாவைக் காணச் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.எ