முகப்பு
சேலம்

மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்

சேலம் மாவட்டம், கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள்

Updated On : 11 மே 2013, 12:17 pm IST
பகிர்:

சேலம் மாவட்டம், கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.

பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதையொட்டி, மேட்டூரிலிருந்து கொளத்தூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.

கொளத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

இதனால், கடந்த பத்து நாள்களாக பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை முதல் பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு செல்வதற்கு வசதியாக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல, சில கிராமங்களும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதற்காக, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். மேட்டூர் முதல் தமிழக- கர்நாடக எல்லையான பாலாறு வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.