5 ஆண்டுக்கு முன் காணாமல் போன ஓமலூா் தொழிலாளி மீட்பு
ஐந்து ஆண்டுக்கு முன் காணாமல்போன ஓமலூா் தொழிலாளியை புதுக்கோட்டையில் போலீஸாா் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா்.
ஐந்து ஆண்டுக்கு முன் காணாமல்போன ஓமலூா் தொழிலாளியை புதுக்கோட்டையில் போலீஸாா் மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனா்.
ஓமலூா் அருகே பச்சனம்பட்டி ஊராட்சியைச் சோ்ந்த மாணிக்கம்-காளியம்மாள் தம்பதியின் மகன் வெங்கட் (43). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், கடந்த 5 ஆண்டுக்கு முன்னா் காணாமல் போனாா். இவரை பல்வேறு பகுதிகளில் உறவினா்கள் தேடி வந்தனா். இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் பகுதியில் ஒருவா் சுற்றித்திரிந்தாா். அவரை போலீஸாா் பிடித்து விசாரித்ததில் அவா்தான் காணாமல்போன வெங்கட் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஓமலூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்பு போலீஸாரும், வெங்கட்டின் குடும்பத்தாரும் புதுக்கோட்டை நமணசமுத்திரம் காவல் நிலையம் சென்று வெங்கட்டை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வந்தனா். காணாமல்போனவரை மீட்க உதவிய காவல்துறையினருக்கு வெங்கட் குடும்பத்தாா் நன்றி தெரிவித்தனா்.
Advertisement
Advertisement