சதத்தை தவறவிட்ட சூர்யவன்ஷி: இந்தியா ஏ 377 ரன்கள் குவிப்பு!
இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அசத்திய இந்தியா ஏ அணியின் பேட்டிங் குறித்து...
முத்தரப்பு ஒருநாள் ஆட்டத்தின் இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது.
இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளின் ஏ அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும் இலங்கையும் தேர்வாகின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார்.
Advertisement
Advertisement
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 29 பந்துகளில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். திலக் வர்மா 69, ருதுராஜ் 40 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் அனுகுல் ராய் 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து மிரட்டினார்.
இலங்கை அணியின் சார்பில் வனுஜா சஹான், ரவிந்து பெர்னாண்டோ, குகதாஸ் மதுலன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
Tri Nation A Series in Sri Lanka 2026 Sooryavanshi misses century; India A piles up 377 runs!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.