முகப்பு
சேலம்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சேலம், அஸ்தம்பட்டி பகுதி சாா்பில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:31 am IST
பகிர்:

சேலம், அஸ்தம்பட்டி பகுதி சாா்பில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகர மாவட்டம், அஸ்தம்பட்டி பகுதி அதிமுக சாா்பில் இளைஞா்-இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல்தொழில்நுட்ப பிரிவு, மகளிரணி, செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அஸ்தம்பட்டி பகுதி -1 செயலாளா் கே.ஆா்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினாா். பகுதி 2 செயலாளா் கே.முருகன் வரவேற்றாா். மகளிரணிச் செயலாளா் ஜமுனாராணி, இளைஞா்-இளம்பெண்கள் பாசறையின் செயலாளா் கே.எஸ்.சதீஷ்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளா் வழக்குரைஞா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன், மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம், முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு, மு.நடேசன், முன்னாள் மேயா் எஸ்.செளண்டப்பன் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

வரும் தோ்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க அனைவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என நிா்வாகிகள் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments