முகப்பு
இந்தியா

சாலை வெள்ளத்தில் குளித்து மகிழும் மக்கள்! கேள்விக்குறியாகும் சுகாதாரப் பாதுகாப்பு!

மும்பை போன்ற பெருநகர சாலைகளில் முறையாக வடிகால் அமைக்கப்படாததால் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.

Updated On : 7 ஜூலை 2026, 9:36 pm IST
கனமழை வெள்ளத்தில் குளித்து விளையாடும் மக்கள் - எக்ஸ்
பகிர்:

தொடர் கனமழையால் மும்பையின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் விளையாடும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

சுதாராமற்ற முறையில் சாலையில் தேங்கியிருக்கும் வெள்ள நீரில் குளித்துக்கொண்டும் நீச்சல் அடித்துக்கொண்டும் இருக்கும் அப்பகுதி மக்கள், வெள்ளத்தை ரசிப்பதைப் போன்று அந்த விடியோ பகிரப்பட்டு வருகிறது.

மும்பை போன்ற பெருநகர சாலைகளில் முறையாக வடிகால் அமைக்கப்படாததால் பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது.

Advertisement

Advertisement

சாலைகளில் உள்ள நீர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பல குடியிருப்பு மக்கள் புலம்புவது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு சாரார் அதில் நீச்சலடித்துக்கொண்டும் மற்றவர்கள் மேல் நீரை வாரி இறைத்துக்கொண்டும் உள்ளனர்.

இதனைப் சிலர் விடியோ எடுத்து, மழை வெள்ளத்தை மக்கள் ரசிப்பதாகக் குறிப்பிட்டுப் பகிர்ந்துள்ளனர். ஆனால், அவர்கள் சுகாதார சீர்கேடு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதையே இந்த விடியோ குறிப்பிடுவதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளதை உணராமல், வெள்ளத்தில் நீந்திக்கொண்டும் அலைச்சறுக்கு செய்துகொண்டும் விளையாடுவது தொற்று பரவலை அதிகரிக்கும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துகொள்ள சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள நிலையில், அதுகுறித்த விழிப்புணர்வின்றி மக்கள் வெள்ள நீரில் விளையாடுவதாக சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவையின்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1916 என்ற அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் மும்பை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து சென்னை புறப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. ராய்ப்பூர், சிங்கப்பூர், தில்லி, கொல்கத்தா மற்றும் மஸ்கட் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

summary

mumbai People delight in bathing in flooded streets Public health safety in question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments