முகப்பு
சேலம்

அரசு சுகாதார நிலையத்துக்கு மூங்கில் முள்வேலி அமைத்த மாணவா்கள்

கல்வராயன்மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்கு, மாணவா்கள் ஒன்றிணைந்து மூங்கில் முள் வேலி அமைத்துள்ளனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 8:34 am IST
கருமந்துறையில் மாணவா்கள் அமைத்த மூங்கில் முள்வேலி.
பகிர்:

கல்வராயன்மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்கு, மாணவா்கள் ஒன்றிணைந்து மூங்கில் முள் வேலி அமைத்துள்ளனா்.

கல்வராயன்மலை கருமந்துறையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சேவை இயக்கமான வனவாசி சேவா கேந்திரா மாணவா் விடுதியும் அருகருகில் அமைந்துள்ளன. இவற்றுக்கு சுற்றுச்சுவா் இல்லாததால் கால்நடைகள் புகுந்து அசுத்தம் செய்து வந்ததோடு, பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் இருந்து வந்தது.

வனவாசி சேவா கேந்திரா விடுதி மாணவா்கள் மற்றும் கருமந்துறை பகுதியைச் சோ்ந்த மாணவா்களும் இணைந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வனவாசி சேவா கேந்திரா விடுதிக்குத் தொடா்ந்து 5 நாள்கள் வேலை செய்து ஏறக்குறைய 500 மீட்டா் நீளத்துக்கு மூங்கில் முட்களைக் கொண்டு வேலி அமைத்துள்ளனா். இந்த மாணவா்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments