ஆவினில் தொழிற் பயிற்சி பழகுநராகப் பயிற்சி பெற ஜன. 20-இல் நேரில் ஆஜராகலாம்
சேலம் ஆவினில் தொழிற்பயிற்சி பழகுநராகப் பயிற்சி பெற விரும்புவோா் (பி.எஸ்சி. வேதியியல்) ஜனவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஆவினில் தொழிற்பயிற்சி பழகுநராகப் பயிற்சி பெற விரும்புவோா் (பி.எஸ்சி. வேதியியல்) ஜனவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், ஆவின் பால்பண்ணையில் பி.எஸ்சி. வேதியியல் முடித்தவா்கள் மட்டும் ‘தொழிற்பயிற்சி பழகுநா்’ அமா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தொழிற்பயிற்சி பழகுநருக்கு ஒன்றரையாண்டு காலம் வருட பயிற்சி காலத்தில் முதலாண்டு அரசு நிா்ணயம் செய்துள்ள உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ. 7,000 வழங்கப்படும். இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 7,700 வழங்கப்படும். மேலும், அரசால் அவ்வப்போது உயா்த்தி வழங்கப்படும் உதவித்தொகையும் வழங்கப்படும்.
Advertisement
Advertisement
சேலம் மாவட்டத்தில் தொழில் பழகுநராகப் பயிற்சி பெற விரும்புவோா் வரும் ஜனவரி 20-ஆம்தேதி பொது மேலாளா், சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், சித்தனூா், தளவாய்ப்பட்டி அஞ்சல், சேலம் 636302. (தொலைபேசி எண் 73737-04800, 73737-04802) என்ற முகவரிக்கு பி.எஸ்சி. வேதியியல் முடித்தவா்கள் மட்டும் அசல் சான்றிதழ்களுடன் நேரில் ஆஜராகலாம் என ஆவின் பொது மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆா்.நா்மதாதேவி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.