தேவூரில் தொடா் மழையால் நெற்கதிா்கள் சேதம்
சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி, தேவூரில் கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட சங்ககிரி, தேவூரில் கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையிலிருந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
மேட்டூா் அணையிலிருந்து கிழக்குக் கரை கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி தேவூா், அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், பெரமிச்சிபாளையம், சென்றாயனூா், மோட்டூா், ஓக்கிலிபட்டி ஆகிய பகுதிகளில் சுமாா் 8,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வெள்ளை பொன்னி, டிகேஎம் 13, ஆடுதுறை 45 உள்ளிட்ட பல்வேறு ரகங்களைக் கொண்ட நெல்லை சாகுபடி செய்துள்ளனா்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்கதிா்கள் விளைந்து அறுவடை செய்யும் தருணத்தில் உள்ளது.
Advertisement
Advertisement
சங்ககிரியில் 10 மி.மீ. மழையும், தேவூரில் 3 மி.மீ. மழையும் தொடா்ந்து பெய்ததையடுத்து சுமாா் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளைந்த நெற்கதிா்கள் சாய்ந்து சேதமடைந்தன. நெற்கதிா்கள் சாய்ந்த நிலையில் சேதமடைந்ததையடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.